தந்திக்கு டா...டா....!
தந்தி என்று சொன்ன உடன்
தந்தி அடிக்கும் நம் உடம்பு..!
வியர்வையோடு சைக்கிளில்
தந்தி கொண்டுவரும் தபால் காரரை
பார்த்து விட்டால் மனதுக்குள்
ஒரு பரிதவிப்பு - மண்டையை
போட்டது யார் என்ற கவலை !
செல்லாய் அறிப்பது உண்டு ...!
--------------------------------------------------------------------------
தந்தி
சிக்கனமான எழுத்துகளில்
சீறியஸ் செய்திகளால் .....
சிலருக்கு பேரிழப்புகள்
-------------------------------------------------------------------------
பெரும்பாலும்
பெற்றோரை விட்டு
தூர வந்து வேலை பர்போர்க்கு
மாதக் கடைசியல் வந்தால்
வையிற்றில் ஒரு புலி கரைப்பு
நட்புக்களின் மனித நேயத்தால்
கிடைக்கும் அன்பின் அரவணைப்பு !
--------------------------------------------------------------------------
வீட்டில் இழவு விழுந்து விட்டது
என்றல் இரவு நேரத்தில் தபால் ஆபீசில்
தூங்கி விழும் சிப்பந்தியை எழுப்பி
கட் ....கட்...கட ...கடா... என்று தந்தி
வார்த்தைகளை அவர் அவசரமில்லாமல்
அனுப்பும் போது! அதில் அப்பாவுக்கு பதில்
அம்மாவையும் ஆல் மாறாட்டமாய்
தப்பாய் அனுப்பி விடுவதும் உண்டு !
குடும்பத்தில் குழப்பம் வரு வதும் உண்டு ..!
----------------------------------------------------------------------
பெண் பார்த்து விட்டு போன மாப்பிளையின்
வீட்டில் இருந்து தந்தி வருவதுண்டு ..........!
அதில் மங்கள செய்தி வருவதுண்டு ..........!
மாப்பில்லையின் முகம் மணப் பெண்ணுக்கு
தெரிவதுண்டு..........! அதனால் பெண்ணின்
முகம் நாணத்தால் சிவப்பதுண்டு ....!
--------------------------------------------------------------------
தந்தியில் பெரும்பாலும்
பாதர் டைடூ ஸ்டார்ட் இம்மிடிஎட்லி
என்ற வார்த்தைகளை
படிப்போரின் இதயம் கலங்கி
கண்ணீர் வடிப்பதுண்டு !
அப்பாவின் முகம் மனதிரையில்
வந்து போகும் போது .................!
இதயம் வெடித்து வாய் திறந்து
அழுவதும் உண்டு .......................................!
------------------------------------------------------------------------
அலுவலகத்தில் தந்திக்கு தனி மரியாதை உண்டு
லீவ் எடுக்க தந்தி உதவி செய்வதுண்டு !
உறவுகளை இனைக்கும் பாலமான தந்தி
165 ஆண்டு காலம் நம்மோடு வாழ்ந்தாலும்
இன்று நம்மை விட்டு பிரியும் தந்திக்கு
உணர்வோடும் ! உயிரோடும் பிரியா
விடை கொடுப்போம் !
போய்வா தந்தி .........டா ....டா.....பை...பை ...!

