எனை வாட்டிய வறுமைச் சமுகம்

பூங்குயில் கூவ கலைந்த
என் தூக்கம் - கலைத்த
குயில் காண சென்றேன்
பக்கத்து பூங்காவில். . . . . . .!
மலர்களின் இருப்பிடம்
மாறித்தான் போயிருந்தது
வறுமையின் காட்சியகமாக. . . . . .!

பசியில் அழுகும் பச்சிளம் பிஞ்சு
பரட்டை தலையுடன் திரியும்
நாளைய தூண்கள் துருவோடு. . . . . . .!
கூலிக்கு விரையும் பழகிப்போன
தாய்மனது - என்ன சொல்வேன் . . . . . .?
முர்ட்கம்பிகளால் இதயத்தை
பிணைத்த ஒரு வலி. . . . . . . . . !

என் தோழர்களை தேடினேன்
கைபேசியில் - நான் பெற்ற பதில்
"போய் உன் வேலையை பார் "
சரிதான் வேலை இல்லாத
குற்றத்திற்காகவா எனக்கிந்த
தண்டனை. . . . ?வேலையில்
இருக்கும் தோழா உனக்கேது
நேரம் இவர்களை பார்க்க. . . . . .!
உன் குடும்பத்திற்காக மட்டும்
நேரம் என்ற பொதுநல
சிந்தனையாளன் நீ . . . . . . .!
நேரம் இருக்கும் அளவு
என் கையில் பணம்
வேண்டுகிறேன் பசிமறந்து
அவர்கள் படிக்க. . . . . . . . !

மனம் வருந்தி சென்று
சாய்ந்தேன் இறைவன் சந்நிதியில். . . . . !
அங்கும் சில்லறை சத்தத்தில்
சிரித்தன திருவோடுகள். . . . . . . . . !
குழந்தைகளெல்லாம் பசியில் வாட
இறைவன் மீது மட்டும்
அம்சமாக அபிசேகங்கள். . . . . . . . . !
ஊத்திய பாலும், உடைத்த
தேங்காயும்,உருக்கிய நெய்யும்,
உரித்த பழமும்,உண்டியர்க்காசும்
செல்லும் இடம் எங்கே. . . . . . . . .?

பகுத்தறிவையும் பரமசிவனையும்
இருகண்களாக மதிப்பவன் நான். . . . . . .!
" ஏழையின் சிரிப்பில் இறைவன் "
என்ற எம்முன்னோர் தத்துவம்
தவழ்வது புத்தகத்தில் மட்டும் தானா. . . . . .?
நரேந்திரனது விவேக சிந்தனைகள்
பெருமைப்பட பேச மட்டும் தானா . . . . . .?

ஆதரவுக்கு எங்கும் மக்களின்
வறுமை காண பொறுமை
இல்லையட தோழா. . . . . . . . . . . .!
இப்பொழுது குயிலின் குரல் கேட்டால்
என் குருதி உறைகிறது
குற்ற உணர்வு உதைக்கிறது. . . . . . . !
என்ன செய்ய போகிறேன் இவர்களுக்கு. . . . . .?

எழுதியவர் : பொன்ராஜ் (5-Jul-13, 1:00 pm)
சேர்த்தது : ponraj
பார்வை : 84

மேலே