ஆரம்பப் பாடமது.

வண்ணப் பூங்குளத்திலொரு
கல்லினை எரிந்தது போல்
கண்ணால் எண்ண இயலா
மெல்லிய அதிர்வலைகள்.

அதிர்வலைகள் பெருகியதால்
அடுத்து அவை வெள்ளமென
பள்ளங்கள் குமிழியிட
பேரலையாய் எழுந்தனவே.

எழுந்திட்ட எண்ணங்களில்
எழுதிடா சூத்திரங்கள்
தன்னைத் தீர்வு செய்ய
திரையதில் ஓடி நிற்க

ஓடிடும் நினைவுகளில்
ஒன்றினை கைப்படுத்த
ஓரத்தில் வலியெடுக்க
ஓணானாய் தலைதூக்க

தூக்கிய கொள்கைகளில்
தூமறைப் பூச்சு கண்டு
நோக்கிய நோக்கினிலே
வாக்கியம் விடையானது.

விடையென கிடைத்ததுவோ
தென்றலாய் மனம் தடவி
இடையில் வேறெண்ணம்
இடறாமல் தடுத்ததுவே.

தடுப்பது தாயாயினும்
தயங்காமல் தந்திடென்று
அடுத்தவர்க்கு உதவிடென்னும்
ஆரம்பப் பாடமது.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (5-Jul-13, 4:11 pm)
பார்வை : 75

மேலே