பெண்சிசுக் கொலை
சோதனைக் குழாயில்
குழந்தை வரம் தந்த
விஞ்ஞானமே, ஏன்
பெண் சிசுவிற்கு மட்டும்
வேதனையாய் மாறினாய். . . . . . . ?
விஞ்ஞானம் அதை
மதியில் வளர்க்கும் மனிதா....,
பெண் ஞானத்தை மட்டும்
மதியாதது ஏன் . . . . . . . . . . . . . . . . ?
அணு ஆராய்ச்சி பெண்கள்
ஒருபுறம் அணு அணுவாக
சிதறும் பெண் சிசு மறுபுறம்.....,
காமம் மட்டும் தான்
உன் கருத்தில் இருந்தால்
கருத்தடை முறையும்
உனக்காக தானே. . . . . . . . . . . . . !
பெண்சிசு கலைப்பிற்க்குத்
துணை போகும் விஞ்ஞான
கயவர்களை கழுவில் ஏற்றி
கசையடி கொடுக்கத் தான்
துடிக்கிறது மனது
மலராமலே மடிந்து போகும்
மன்னிக்கமுடியாத சிசுக்கொலை கண்டு. . . . . . . . . !