திருமணம் !

திருமணம்
இருமனம் இணைந்து
ஒருமனமாகும்
நறுமணம் !

திருமணம்
துறவு
விடைபெற
நடைபெறும்
உறவு !

திருமணம் !
பண்பாட்டின்
பாதுகாப்பு பெட்டகம் !
அடிமை வாழ்வின்
உரிமைபத்திரம் அல்ல !
அன்பில் அறம் வாழும்
இல்வாழ்வின் இனிய தத்துவம் !

இல்லறமில்லா நல்லறமேது ??
நல்லறமாம் இல்லறம்வாழ
திருமணமில்லா
மறுமணம் எது ??

திருமணம் !
சொர்கத்திலா நிச்சைகபடுகிறது ????
திருமணங்களில்
சொர்க்கம் நிச்சைக்கபடுகிறது !!!
அவரவர் எச்சத்தால் !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (6-Jul-13, 11:14 am)
சேர்த்தது : mohd farook
பார்வை : 94

மேலே