விதம் விதமாய் விளையாடுது பெண்ணின் வாழ்வில்

கன்னியவளை கண்டு
கரம் பிடித்து
கனவன் எனும் பெயர் எடுத்து
குடும்பமும் குடித்தனமாய்
குதுகளிக்க ,,,,,,,
மரம் விட்டு மரம்தாவும்
குரங்குபோல்
மனம் மாறும் மனிதனால் ,,,,,,,,,,
சீரும் சிறப்பும்
சின்னா பின்னமான
சிறுபிள்ளை கலியாணமாம்
சீதனத்தால்
சீனம் கொண்டானோ ,,,,,,,
ஊர் ஊராய்
உன் பேச்சு உருகுது
என் மூச்சு ,,,,,,
வாய் கூசா வார்த்தைகள் எல்லாம்
வழிவகுத்த வள்ளவன் ,,,,,,,
ஆடவர் கூட்டமாய்
ஆடுகின்றாள் ஆட்டமாய்
ஓடுகின்ற
உதிரமெல்லாம் வீடுதேடும்
விபச்சாரியாய் என்று
பட்டம் கட்டி
பறக்கவிடும் சமுதாயமாம் ,,,,,,,,
விதி செய்த கோலமதால்
விலகி தவித்தாலும்
விளங்காத சமுகம் ஒன்று
விரல் விட்டு எண்ணி
விதம் விதமாய்
விளையாடுது பெண்ணின்
வாழ்வில் ,,,,,,,,,,,,,
கவிஞர் வி. விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }