அவஸ்தையை சொல்லுமோ அலங்காரச் செடி ?

வீட்டிற்குள் சுவரில் மாட்டிய

அலங்கார செடிக்கு

அருமையாய் ஊற்றியாகி விட்டது தண்ணீர்.......!!!

போர்ட்டிகோ கட்ட

கட்டுமான பணியாளர்கள் வந்து விடுவார்கள்.....

போட்டுத் தள்ளு நாலு தென்னை மரத்தை.......!!!

நம் விழிகளுக்கு அழகுணர்ச்சியை தந்தபடி.....

ஏசி அறைக்குள் மூச்சி திணறியது

அந்த அலங்காரச் செடி.......

தென்னை மரம் சரிந்து கிடந்தது........

அதன் கண்ணீர் இளநீர்............

பேராசை மனிதர்களால் இனிமையென இப்போதும் ரசிக்கப் படுகிறது..........

எவன் செத்தா எனக்கென்ன ?

நான் நல்லா இருக்கணும்.......

இது ஒரு அழகான நடைமுறை மனித நேய நியதி..!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Jul-13, 6:50 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 67

மேலே