தலைகீழ் தமிழன்

எழுத்து பிழை கண்டால்
எழும் கோவம் என் பிழையில்
தளர்ந்துவிடுகிறது - ஏனென்றால்
என் தலைஎழுதுத்தில் பிழை இருக்கிறது

சந்தி பிழைகளை
சந்தித்தது இல்லை
வராத சந்தி யை விட
அதை தெரியாது என சொல்லும்
சந்ததிகள் வந்த பின்
என் வரிகளும் கவிதையாகிவிட்டது

எதுகையும் மோனையும்
நான் எடுத்து பிரிக்கும் போது
வந்த எதுகையும் வராத மோனையும்
ஒன்று சேர்க்க நினைத்து
கிறுக்கி வைத்தேன் சில பக்கங்கள்

இரட்டை கிளவியில் விளக்த்தில்
தலைவலி வர
சிலேடை விளக்கம் தெரியாமல்
வகுப்பறையில் முட்டி போட்டதை
பழி தீர்க்கவே எடுத்துவிட்டேன் போல எழுதுகோலை

இலக்கண பிழை தவிர்க்க
இலக்கியம் படிக்க வேண்டுமா
அய்யோ முடியாதென்று
நானே ஒரு இலக்கணம் வகுத்துகொண்டேன்

பொழுது போக்கிற்கு
எழுதிவிட்டேன்-அதில் உள்ள
பழுது பார்க்க மறந்துவிட்டேன்

தலையங்கம் தேடி
பொருளங்கம் தெரிந்துகொண்டேன்
எனதங்கம் நெளிய
தமிழங்கம் கற்றுக்கொண்டேன்

எழுதுவதெல்லாம் கவிதையல்ல
அதை எழுதிவிட்ட நானும் கவிஞனல்ல

எழுதியவன் நான் ஏட்டை கெடுத்துவிட்டேன்

அரைகுறை தமிழில்
குறைநிறை கவிதை படைத்துவிட்டேன் அதன்
குரல்வளை பிடித்து நெரித்துவிட்டேன்

முழுவதும் படிக்காமல்
முத்தமிழ் தமிழன் என்றேன்
முழுவதும் நனையாமல்
முத்தெடுக்க துடித்தேன்

முழுவதும் தமிழை படிக்கிறேன்
தவறில்லாமல் எழுத முயற்சிக்கிறேன்

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Jul-13, 8:29 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 167

மேலே