சினத்தை சிக்கனமாய் செலவு செய்!
சினத்தை சிக்கனமாய்
செலவு செய்தால்
எக்கணமும் நன்று!
சினத்தை சில்லறையாய்
இறைத்து வாழ்ந்தால்
தொல்லைவரும் என்றும்..!
சினம் ஒரு மது!
அதை தொடாதவரை நல்லது!
தொட்டுவிட்டால்
தொட்டவரை சும்மா விடாது!
சின்னா பின்னமாக்கி விட்டுத்தான் அடங்கும்!
வாழ்வில்
பணம் சம்பாதி!
பலர்
மனம் சம்பாதி!
ஆனால்
சினம் சம்பாதிக்காதே!
நமக்கிருக்கும்
நற்பெயரை
சரிபாதியாக்கிவிடும்
சினத்தை குறைப்போம்!
சிந்து பாடுவோம்!