கை கோர்ப்போம்! கலக்குவோம்!
தனியாய் பறக்கும் பறவையைவிட
சேர்ந்து கூட்டமாக பறக்கும்
பறவைக்கூட்டத்தை
காணும் போது
மிகவும் இன்பம் கொடுக்கிறது..!
தனியாய் செல்லும் மேகத்தைவிட
கருப்பும் வெளுப்புமாய் சேர்ந்து
நம்மை சுற்றி மிதக்கும்
வான்மேகத்தை காணும் போது
பல பல துன்பம் மறக்கிறது..!
தனியாய் தோன்றும் வண்ணத்தைவிட
வெயிலின் மழையின் ஊடே
ஏழுவண்ணத்தில் அழகாய் தோன்றும்
வானில் சிரிக்கும் வானவில்
நம்மை கவர்ந்து செல்கிறது!
எதுவுமே கூட்டாய் செய்தால் சுகமே!
தனியாய் சிரிப்பதையும்
சேர்ந்து சிரிப்பதையுமே
எடுத்துக்கொள்வோம்!
எது சுகமென உங்களுக்கே தெரியும்!
எனவே தோழமையே!
எந்த நற்செயலையும்
சேர்ந்து செய்தால் பயனே!
வாருங்கள்!
கை கோர்ப்போம்! கலக்குவோம்!