சில்லறை

‘’தம்பி… ஐம்பது பைசா சில்லறை இல்லை… இந்தா
மீதிக்கு சாக்லேட்’’

கடைக்காரர் இப்படி மீதிச் சில்லறையை மிட்டாய்
தந்து சரிக்கட்டுவது இதோடு பலமுறையாயிற்று.

மீதிச் சில்லறை கிடைத்தால் தன் உண்டியலில் சேர்க்கும்
ரகுவிற்கு தற்போது கடைக்காரரின் நடவடிக்கையால்
நின்று போனது…

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்..

மறுநாள்..

‘’டேய்…குளிக்க ஷாம்பு வாங்கி வாடா…’’

அம்மா தந்த இரண்டு ரூபாயை தன் உண்டியிலில்
போட்டு விட்டு கடைக்கு நடந்தான் ரகு.
..
‘’ஷாம்பு …கொடுங்க…’’

ரகுவின் கைக்கு ஷாம்பு வந்தது.

‘’இந்தாங்க…என்கிட்ட இரண்டு ரூபாய் சில்லறை இல்லை
நீங்க மீதமா தந்த நாலு சாக்லெட்…வெச்சுகுங்க…’’

வெற்றிப் புன்னகையுடன் நடந்தான் ரகு.

எழுதியவர் : இளந்தென்றல் - (8-Jul-13, 7:50 pm)
பார்வை : 157

மேலே