மின் பற்றாக்குறையை முற்றிலும் ஒழித்த மன்னர்
ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த முறை பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிள்ளைகள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது, மின் விரயம் குறைந்து, பண செலவும் குறைந்து வளர்ச்சி ஏற்பட்டது. கனவு கண்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த நான், திடீர் என்று ஏற்பட்ட புழுக்கத்தால் நடு இரவில் எழுந்தேன், காரணம் மின் வெட்டு அப்போதுதான் உணர்ந்தேன் நான் கண்டது கனவு என்றும், நாம் மன்னராட்சி காலத்தில் இல்லை, மக்களாட்சி காலத்தில் உள்ளோம் என்று.......கீழே சில தகவல்கள்
1)மின்விசிறி 75 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 13 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 29.5
(2) டியூப் லைட் 40 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12
3) CFL லைட் 15 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 4.5
4)பிரிட்ஜ் 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 108
5) )கொசுவிரட்டி 9 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.7
6)சார்ஜர் 7 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.1
7) ஏசி1.5 டன் 2650 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இயங்கினாலே மாத நுகர்வு யூனிட் 79.5
8) EXHAUST மின்விசிறி 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 7 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 31.5
9)கிரைண்டர் 300 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 2 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 18
10) மிக்ஸி 500 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 15
11) துணி துவைக்கும் இயந்திரம் 400 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12
12) அயர்ன் பாக்ஸ் 750 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 22.5
13) கம்ப்யூட்டர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30
14) ரூம்கூலர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30
15) வாட்டர் ஹீட்டர் 2000 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 60
மின் பற்றாகுறையை தடுக்க, மின் உபகரணங்களை முறையாக கையாள விழிப்புணர்வு மேற்கொண்டாலே உபரி மின் நிலைமையை அடைய முடியும்
தொகுப்பு
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்