என் காதல் வாழ்ந்திடவே ///////////??????????????
என் காதல் வாழ்ந்திடவே
என் விடியல் நீதானே என் கனவும் நீதானே
உந்தென் நிழல்போல உன்னை தொடர்ந்தேனே
என் நிலவும் நீதானே என் வானமும் நீதானே
இரவு தானாய் வரும்வரை காத்து கிடந்தேனே
உன்னை நினைக்கையில்தான் கவிஞன் ஆகிறேன்
பார்க்கும் அனைத்திலுமே
உன்னை காணுகின்றேன்
கண்களை திறந்து கொண்டு
கனவு என்பதெல்லாம்
காதல் என சொல்லி பைத்தியம் ஆகின்றேன்
உன்னால் ஆகின்றேன் …………….
கானல் நீர்கொண்டு தாகம் தீராது
உன் மௌனம் உள்ளவரை என் காதல் வாராது
என் கவிதையெல்லாம் உன்னை சேர்ந்திடவே
வரிசை கட்டிக்கொண்டு காத்து கிடக்கிறதே
நீருக்கு ஏங்கும் நிலம்போல
உன் தோள்சாய்ந்திட என் காதலும் ஏங்குதே …