" தாய் "

மேனியெங்கும் இரத்தமாக
நான் பிறந்த நாளிலன்று,

என் அழுகை பார்த்திடவே
நீ சிரிக்க முத்தமிட்டு,

ஊரெங்கும் என்புகழை
நீயும்பாட கேட்டுக்கொண்டு,

தோளில் என்னை தூக்கிக்கொண்டு
நீ வளர்த்த காலம் யாவும்,
நீயுரைக்க,

காணுகின்றேன் தாயே!
உந்தன் மடி மேலே...!

எழுதியவர் : இன்பராஜன் (11-Jul-13, 2:21 pm)
பார்வை : 136

மேலே