மனிதனின் பரிணாம வளர்ச்சி!
யுகங்கள் கடந்தது
ஆண்டுகள் கழிந்தது
மனித பிறவிகள்
சாதித்தது என்ன ?
குரங்கிலிருந்து பிறந்தவன்
கூன் நிமிர்ந்து நிமிர்ந்து நடந்தான்
மிருக முகம் மறைத்து
மனித முகம் பூண்டான் .............
சப்தங்களை மாற்றி
பாழை பழக கற்றுக்கொண்டான்
எல்லைக்கு ஏற்றார்ப்போல்
மொழி ஒன்றை கண்டு பிடித்தான் .............
காடுகளில் சுற்றி திரிந்தவன்
நாடு நோக்கி பயணம் செய்தான்
அம்மணமாய் திரிந்து கிடந்தவன்
ஆடை தேடி அதையும் அடைந்தான் ............
பழங்களை உண்டு காலம் கழித்தவன்
பசியை போக்க உணவு படைத்தான்
கொள்ளை நோயால் தினமும் மடிந்ததால்
மருத்துவம் படைத்து மரணம் தவிர்த்தான் ............
அறிவியல் கண்டான் அண்டம் பாய்ந்தான்
வானூர்தி ஏறி வானம் பார்த்தான்
விரல் நுனியால் உலகை இயக்கி
விந்தைகள் புரிந்து வரலாறு படைத்தான் .............
எல்லைகள் பிரித்து
தொல்லைகள வளர்த்தான்
இனமொன்று கண்டு
கொலைகள் செய்தான் ..............
எல்லா நிலைகளையும்
இலகுவாய் கடந்தான்
நாளுக்கு நாள் வளர்ந்து
நாகரீகம் பூண்டான் ...........
பணமொன்று கண்டான்
மனங்களை கொன்றான்
சுயநலம் தேடி
பிறறதை பறித்தான் ..............
ஆளும் வம்சம் என்றும்
அடிமை வம்சம் என்றும்
இரண்டாய் பிரித்து
மனிதம் கொன்றான் ..............
ஆயிரம் வளர்ச்சி கண்ட போதிலும்
அடிப்படை குணமே இன்றும் வாழுது
உடல் அளவில் தேறிய வளர்ச்சி
மனதளவில் இன்னும் மாறவே இல்லை ...........
குரங்கிடம் இருந்து தோன்றிய மனிதனுக்கு
குரங்கை போலவே புத்தி தாவுது
பிடுங்கி புடுங்கி உண்பதைப்போலே
பிறறதை பொருளை மனம் நாடுது .........
மனிதனாக மாறியபோதும்
அவன் குணம் இன்னும் மாறவே இல்லை
பேச்சில் மட்டும் மனிதம் தெரிய
குணத்தில் அவன் இன்னும் மிருக இனமே !