நீயும் துணிந்து நில்

தோல்வி கண்டு
துவழாதே தோழா
நாளை நம் நாளே
நீயும் முன்னேறி வாடா

ஆயுள் ஒரு நாள் என்று
சிரிக்காத மலரும் உண்டா ...?
முட்கள் குத்தும் என்று
அவற்றை தன் மேல் சுமக்காத
ரோஜாவும் உண்டா ... .?

நேற்று வரை கருவறைதான் எமக்கு
நாளை முதல் கல்லறை
அதுதான் நம் கணக்கு
இன்றையும் நீ இருளுக்குள் தள்ளாதே..
இனியும் துணியாமல் நீயும் இருக்காதே...

சமுத்திரம் நுழையா மழை துளியும்
மண்ணின் மேலே வீணாகும்
நிலத்தை பிளக்காத விதையும் கூட
மண்ணுக்குள்ளே சிதைந்து போகும்...

உன்னை நீயே வீரனாக்கு
நெஞ்சை உரமேற்றி வலுவாக்கு
குனிந்தது போதும் துணிந்து நில்லு
நாளையை நீயும் உனதாக்கு
நானும் ஒரு வீரன் என்று உலகுக்கு காட்டு

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (11-Jul-13, 4:29 pm)
பார்வை : 302

மேலே