ஏழாம் அறிவு எது ?
தன்னுடலால் மட்டும் உணர்வது
முதல் அறிவு
மரம் செடி கொடி இதர தாவரங்கள்
இதற்குள் அடங்கும் ..............
உடல் மற்றும் நாக்கால் உணர்வது
இரண்டாம் அறிவு
கடவாழ் உயிரினங்கள்
இதற்குள் அடங்கும் .............
உடல் நாக்கு மற்றும் மூக்கால் உணர்வது
மூன்றாம் அறிவு
ஊர்வன வகைகள்
இதற்குள் அடங்கும் ...............
உடல் நாக்கு மூக்கு மற்றும் கண்ணால் உணர்வது
நான்காம் அறிவு
பூச்சி இனங்கள்
இதற்குள் அடங்கும் ...........
உடல் நாக்கு மூக்கு கண் மற்றும் காதால் உணர்வது
ஐந்தாம் அறிவு
விலங்கு இனங்கள்
இதற்குள் அடங்கும் ............
இதனையும் சேர்த்து புரிதலும் சிந்தித்தாலும்
ஆறாம் அறிவு
மனித இனம்
சிலர் இதற்குள் அடங்கும் .............
ஏழாம் அறிவு எது ?
தன்னையும் அறிந்து பிறரையும் அறிந்து
தன்னலம் மறந்து பொதுநலம் புரிந்து
பிறருக்காக வாழ சொல்லும் அறிவே
ஏழாம் அறிவு ............
மனிதனாய் பிறந்து தொண்டுகள் செய்து
மரணித்த பிறகும் மனிதரில் வாழும்
மனிதர் எவரோ
அவரே அதற்க்கு தகுதியானவர் .............