ஏற்ற தாழ்வு !!!

வாழ்க்கையில் ஏற்றம் இறைக்கும் காலம் முதல்
மரமேறும் காலம் முதல்
இன்று விமானம் ஏறும் காலம் வரை
எல்லார்க்கும் ஏற்ற தாழ்வு
இருக்கிறதே
படிக்கும் பள்ளியிலும்
பயணிக்கும் பேருந்திலும்
குடிக்கும் நீரிலும்
ஓடும் ரயிலிலும்
எல்லார்க்கும் ஏற்ற தாழ்வு

இறைவா
என்று தீரும் இந்த ஏற்ற தாழ்வு
என்று தீரும் இந்த ஏற்ற தாழ்வு மோகம்

உன்னை பாடி பயணித்தேன்
உன் ஆன்மீக கடலில்
சித்தம் தெரிந்தது
புத்தி தெளிந்தது

இறைவா இதனை அனைவருக்கும் கொடு ..

எழுதியவர் : (12-Jul-13, 8:48 am)
பார்வை : 286

மேலே