எழுந்து வா தோழி

எழுந்து வா தோழி
சூழ்நிலை:உயிர்த்தோழிகள் இருவரில் ஒருதோழிக்கு விபத்து ஏற்படுகிறது.
விபத்துக்குள்ளான தோழியின் அழகிய முகம் பொலிவிழக்கிறது.அதைப்பார்த்து
மற்றொரு தோழி,வேதனையால்,உணர்ச்சியால்,உருகி எழுதியது.........
ஆருயிர்த்தோழியே!
உதடுகளும் துடிக்கிறது,
உணர்ச்சியால் நான்,
உருகும் போது.
கண்ணில் வடியும்,
கண்ணீர் கூட,
கவனிப்பாரற்று ஆயிற்று.
கனவிலும் கடவுளை நம்பாத நான்,
கண்விழிக்கிறேன்,
கலக்கத்தோடு உனக்காய் பிராத்தனை செய்ய.
முகமாற்று அறுவைசிகிச்சை,
அறிமுகமானால்,
அடுத்த வினாடியே
அதற்கு நான் தயாராவேன்.
அழகான உன் முகத்தில்,
அன்பான என் முகம் பதிக்க.
யார் கண் பட்டது ?
எவர் பார்த்த பார்வை ?
உன் வலி,
உணர்கிறேன் நானும்.
உன்னழகில் பொறமைக்கொண்டு,
இறைவன் செய்த திருட்டா ?
அகம் அழகாய் இருக்கையில்,
முகம் ஒரு பொருட்டா ?
படுக்கையை விட்டு,
பறந்து வா தோழி.
இருக்கையை விட்டு,
இறங்கி வா தோழி.
ஓய்வுக்கு ஒய்வு கொடு,
அழாதே அன்புத்தோழி,
அருகில் நான் இருக்கிறேன்.
அதைவிட நம் நட்பு இருக்கிறது.
அழியாத அன்றில் பறவைகளாய்,
ஆண்டாண்டு காலம்,
அகிலத்தில் நாமிருப்போம் என்பதில்,
அசாத்திய நம்பிக்கை கொள்கிறேன் நான்,