23) நினைத்தேன் எழுதுகிறேன் (2) கதம்பம்......
எழுத்துலக நண்பர்களுக்கு வணக்கம்.. வளர்க நலம்....
இவர்களிடத்தில் அலைபேசியில் உரையாடி 2 மாதத்திற்கு மேல் ஆகிறது.......
1.திரு அகன்
2, திரு பொள்ளாச்சி அபி
3. திரு மோசேஸ்,
4. திரு.கோவை ஆனந்த்
5. நண்பர் நிலவை பார்த்தீபன் &
6. தம்பி ஈஸ்வர் தனிக்காட்டு ராஜா.
அவர்களிடத்தில் நலமாக இருக்கிறேனா என்று தெரியவில்லை : நிற்க .
மகிழ்ச்சி:
அர்த்தமுள்ள கிறுக்கல்கள் புத்தகம் மும்பை தமிழ் சங்கத்தில் கிடைக்கப்பெற்று படித்து அதன் நிர்வாகிகளில் ஒருவர் நண்பர் விநாயக முருகனை அலைபேசியில் அழைத்து பாராட்டி பேசியுள்ளார்கள், மேலும் கொழும்பு தமிழ் சங்கத்தில் இருந்து மின்னஞ்சலில் வாழ்த்து செய்தி வந்திருப்பதாக கூறினார், இன்னும் பல ஊர் / நாடுகளில் இருந்து செய்தி வரும் என்று எதிர் பார்க்கிறோம் -
நன்றி:
என்னையும் ஒரு ஆளாக மதித்து தனி விடுகயிலும், மற்ற செய்தி மூலமாகவும் என்னை படிக்க வைக்கும் நண்பர்களுக்கும் / தன்னுடைய படைப்பை படித்து விட்டு கருத்து எதுவும் எழுத வேண்டாம் என்று தனி விடுகையில் கேட்டு கொண்ட நண்பருக்கும், நன்றிகள் -