இந்தியா - அமேரிக்கா இடையே நெருங்கிய வர்த்தக உறவு அவசியம் - ப.சி..! இந்தியனின் கோவணத்தை உருவும் அளவிற்கு நெருக்கம்..?

இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களின் திறமை பயன்படுத்தாமல் உள்ளது. மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வறுமையை ஒழிப்பது பெரும் சவாலானதாக உள்ளது. இதற்கெல்லாம் தீர்வாக இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் முன்வர வேண்டும் என்றார் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.

இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை கண்டது கடந்த காலங்களில். தற்போது சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக வளர்ச்சி குறைந்துள்ளது. இதன் விளைவாக பட்ஜெட் பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இரு நாடுகளும் வர்த்தகத் துறையில் இணைந்து செயல்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றார்.

இதையே அமைச்சர் ஆனந்த் சர்மாவும் வலியுறுத்தியுள்ளார்...!

இந்தியாவின் வளங்களை, முதலீடுகளை, நிதி ஆதாரங்களை தனது பக்கம் திருப்பிக் கொண்ட அமெரிக்க அரசு, தனது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டுள்ளது...இவையெல்லாம் நடக்கவில்லை என்றால் அமெரிக்க அரசு கிரிஸ் நாட்டைவிட கேவலமாக பொருளாதார சிக்கலில் மாட்டி திணறிக்கொண்டிருக்கும்...

தங்களது பொருளாதார சிக்கலில் இருந்து படிப்படியாக மீண்டு கொண்டிருக்கும் ( தற்காலிகமாக ) அமெரிக்க அரசு இந்தியாவை அடியோடு சுரண்டி கொண்டுபோவதற்கு தயாராக இங்குள்ள காங்கிரஸ் அரசு இருக்கும் நிலைமையில் தான்.....

புதுப்புது சட்டங்களை உச்ச நீதி மன்றம் நிறைவேற்றி வருகிறது...ஊழலுக்கு எதிராக, தற்போதைய அரசியல் கட்சிகளுக்கு எதிராக, அரசியல்வாதிகளுக்கு எதிராக...

ஒருவேளை இவையெல்லாம் டிராகன் வேலையாக இருக்குமோ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (12-Jul-13, 5:26 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 103

மேலே