டில்லி விமான நிலையத்தில் பெண்ணின் செயற்கை காலை கழட்டி சோதனை செய்த அதிகாரிகள்...! அதிபுத்திசாலிகள் அல்லது அரக்கர்கள்..?

38 வயதான சுரஞ்சனா கோஷ் ஐகார என்பவர் மும்பையில் இருந்து டில்லிக்கு விமானத்தில் வந்திறங்கினார். டில்லி விமான நிலையத்தில் இவரது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள் இவரது செயற்கை காலையும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்...

இவர் ஒரு பெண், மாற்றுத் திறனாளி, மார்க்கெட்டிங் விற்பனையாளர், செயற்கை காலை எடுத்து விட்டால் மீண்டும் பொருத்துவது கடினம் என்று எவ்வளவோ கூறியிருக்கிறார்..ஆனால் வெடிகுண்டு பாதுகாப்பு என்று கூறி அவரது காலை உருவியதோடு நிற்காமல், வெடிகுண்டு சோதனை செய்யும் இடத்திற்கு நொண்டிக்கொண்டே இழுத்து சென்றுள்ளனர்.

பிறகு வெடிகுண்டும் இல்லை பித்தளைக் குண்டும் இல்லை என்றவுடன் வெளியே விட்டு விட்டுள்ளார்கள்...!

அதாவது ' புத்தகயா ' மடத்தில் சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது...வெடிகுண்டு வெடித்ததோ இல்லையோ உடனே சொன்னார்கள்...இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பு என்று சொன்னார்கள்... பிறகு இதில் தற்கொலை படையைச் சேர்ந்த பெண்ணும் இருக்கிறார் என்றார்கள்..தற்பொழுது யாராவது இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து துப்பு கொடுத்தால் பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்...!

இதை எதற்கு சொல்கிறோம் என்றால்....எப்படியாவது பெண்களையும் நிர்வாணமாக நிற்க வைத்து சோதனை போட வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார்கள்...

அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் மாற்றுத் திறனாளியாவது மாற்றாத திறனாளியாவது, அனைவரையும் சோதனை போடுவோம்..சோதனை என்ற பெயரில் அரஜாகம் மற்றும் அக்கிரமம் செய்வோம்...மனிதனாவது மிருகமாவது எங்களுக்கு வெடிகுண்டு அரசியல் தான் முக்கியம் என்று கூறுகிறார்களோ...? சர்வதேச அளவில்...அதாவது உலகமய அரசியலில்...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (12-Jul-13, 4:52 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 67

மேலே