திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு!!!!!!

உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும்
அறிவு பெற்றவையாக உள்ளன . அவற்றின் சக்திக்கேற்ப ஓர் அறிவு, ஈரறிவு ,மூவறிவு ,நாலறிவு
ஐந்தறிவு ,ஆறு அறிவு ,உயிர்கள் எனப் பகுத்துக்
காட்டியவர் நம் தொல்பழைமை பாட்டன்
தொல்காப்பியர் .
ஓர் அறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனோடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆ றறிவு அதுவே அவற்றொடு மனமே
தொல்காப்பியம், மரபியல் )
இவற்றுள் முதல் ஐந்தறிவு மெய், தோல் ,வாய், மூக்கு, கண் , காது ஆகியவை துளை உள்ள ஐம்பொறிகள் .
ஆறாம் அறிவாகிய மனம் துளையிடப்படாமல் வெளிப்படுவது ஆகும்.
ஓரறிவு முதல் ஆறுஅறிவு வரை இன்பம் நுகரும்
ஆவல் கொண்ட உயிரினமே உலகில் பறந்து விரிந்துள்ளன எனலாம் .
புல்லும் ,மரமும் உற்றறியும் தொடு உணர்வைக்கொண்ட ஓரறிவு உயிர் இனமாகும்
நத்தை,சிப்பி போன்றவை தொடு உணர்வோடு உண்ணுதல் என ஈரறிவு பெற்ற உயிரினமாகும்
எறும்பு ,கரையான்(சிதல்) போன்ற உயிரினங்கள் உடலால் தொடும் அறிவு வாயால் புசிக்கும் உணர்வோடு மூக்கால் முகர்ந்துணர்தல்அறிவு ஆகிய மூன்றறிவு உயிரினமாகும்
தும்பி நண்டு போன்ற உயிரினங்கள் ,தொடு உணர்வு வாயா ல் சுவையறியும் உணர்வு ,மூக்கால் முகரும் அறிவு கண்களால் பார்க்கும் அறிவு என நான்கு அறிவு பெற்ற உயிரினமாகும்
நீரிலும் ,நிலத்திலும், வாழும் முதலை ,ஆடு ,மாடு ,
குரங்கு ,வானத்தில் பறக்கும் பறவைகள் தொடு ,உணர்வு வாயால் சுவைக்குமஅறிவு கண்களால் பார்க்கும் அறிவு காதால் கேட்கும் அறிவையும் சேர்த்து ஐந்தறிவு உயிரினமாகும்
தொடரும்.....................

எழுதியவர் : எழில் l சோம பொன்னுசாமி (13-Jul-13, 12:02 am)
பார்வை : 364

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே