உனக்கான நாட்கள்
அன்று உன்னுடன் சிறு சிறு
சண்டைகள் போட்டு உன்னை
கோவப் படுத்திப் பார்த்தேன் ......
அன்று நீ என்னுடன் இருந்தாய்
ஆனால்
இன்று உன்னை என் உயிராக
நேசிக்கின்றேன்.........
ஆனால்
இன்று நீ என்னை பிரிந்து விட்டாய்......
அன்று உன்னுடன் விளையாட்டாக
போட்ட சண்டைகள் எல்லாம்
மொத்தமாகக் கூடி .........
உன்னை என்னிடம் இருந்து பிரித்து
விட்டதோ?
இவ்வாறு நிரந்தரமாய் எனை பிரிவை
என்று தெரிந்திருந்தால்
அன்று உன்னுடன் சண்டை போட்ட
நாட்களையும்
உன் அன்புக்கான நாளாக மாற்றி
இருப்பேன் ........