ஏன் இப்படி செய்தாய் ?
கண்டவுடன் காதலித்தாய்
எனைக்கண்டவுடன் காதலித்தாய்
எத்தனை உறவுகள் இருந்தாலும்
நீ மட்டுமே என் உன்னத உறவென்றாய்
என்ன சோதனைகள் வந்தாலும்
எனைப்பிரிந்தால் உயிர்பிரிவேன் என்றாய்
என் உறவுகள் அனைத்தும்
இனி உன் உறவுகளாய் ஏற்பேன் என்றாய்
இப்படியெல்லாம் அழகாய் சொன்ன நீ
எப்படியடி வேறொருவனை மணந்தே சென்றாய்
எனையும் மறந்தே சென்றாய்
எங்கிருந்தாலும் உன் நினைவில் நான் நானாய்...