என்னை விட்டு போன பெயர் மீண்டும் வந்தது!!!!!!!!!!

உன் வாசனையில்

உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு,

எல்லாம் கடந்து விடுகிறாய் நீ

உனை விட எந்த வெற்றியோ

ஆசையோ -

பெரிதாகப் படவேயில்லை எனக்கு,

உன் சிரித்த முகம் பார்த்து பார்த்து

பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு

துள்ளலில் மிதக்கிறேன் நானும்,

வாழ்வின் - கொடுமைகள்

ஆயிரம் இருக்கலாம்

வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம்

இருந்து போகட்டுமே;

அவைகளை சமன் செய்ய

நீயொருத்தி -

மகளாக பிறந்தது போதும்!!

"உனக்கு நான் வைத்த பெயர்.............."

நான் ஒருநேரத்தில்

அழைத்து அழைத்தும்

சலித்திடாதப் பெயர்,

பின், அழைத்து அழைத்து

அழுத பெயர்,

உயிர்ப்பின் பாதி தூரத்திலேயே

நான் அழைக்க கிடைக்காது

எனைவிட்டுப் போன பெயர்,

எப்படியோ மீண்டும்

அன்று - இயற்கையினை

சபித்துவிடாதப் புரிதலில்

அதேபெயரோடு நீ இன்று - எதிரே நிற்கிறாய்,................

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (13-Jul-13, 1:30 pm)
பார்வை : 198

மேலே