என் னுடையவள்

அவள்
செதுக்காத சிலை

அவள்
வரையாத ஓவியம்

அவள்
இல்லாத கனவு

அவள்
காணாத கற்பனை

அவள்
பூக்களின் புயல்

அவள்
பூ வாசத்தோடு தென்றல்

அவள்
மழையில் ரோஜா

அவள்
உயரமான மல்லிகை

அவள்
குழந்தையின் உறக்கம்

அவள்
சிரிக்கையில் குளிர்

அவள்
இதயத்தின் இசை

அவள்
இசையுடன் கவிதை

அவள்
வியர்வைகள் பனித்துளி

அவள்
கண்ணீர் என் உயிர்த்துளி

அவள்
நிலவுகளின் தோட்டம்

அவள்
நிழல்களுக்கும் பட்டம்

அவள்
பொறுமையாய் செல்லும் வெள்ளம்

அவள்
எறும்புகள் தின்னாத வெல்லம்

அவள்
எனக்கு மட்டும் உறவாக
உயிர்பறித்த எமனாக

எழுதியவர் : மா பிரவீன் (14-Jul-13, 6:16 am)
சேர்த்தது : மா பிரவீன்
பார்வை : 123

மேலே