நானும் ஒரு படைப்பாளன்
நானும் ஓர் படைப்பாளன்
நல்லதை எழுதும் பொறுப்பாளன்
விழிப்புணர்வு கொடுக்கும் வரிகள் பதித்து
விந்தைகவி படைக்கும் எழுத்தாளன் ...........
சமூக கருத்துக்கள் பொதிந்து கிடக்கும்
சரித்திர நினைவுகள் நிறைந்து இருக்கும்
ஒழுக்க கருத்துக்கள் ஒங்க உரைக்கும்
ஒற்றுமை பண்புகள் பக்குவமாய் தெறிக்கும் .............
பெண்ணுரிமை குறித்த அக்கறை இருக்கும்
அவருக்கு தேவையான ஆறுதல் இருக்கும்
சாதியை ஒழிக்க சமாதானம் இருக்கும்
சாதிக்க சொல்லும் தன்னம்பிக்கை இருக்கும் ......
மாயம் செய்யும் மதத்தினை சாடும்
மயங்கி மடியும் மதுவை சாடும்
ஊழல் செய்யும் அரசியல் சாடும்
சுரண்டி பிழியும் கல்வியை சாடும் ............
நீதியை வளர்க்கும் நேர்மையை போதிக்கும்
ஒற்றுமையை வளர்த்து அன்பை போதிக்கும்
உழைப்பை கூட்டி உயர்வை போதிக்கும்
உணர்வை கூட்டி தமிழை போதிக்கும் .............
காதல் கொள்ளும் காதலரை போற்றும்
காதலை கொல்லும் காதலரை தூற்றும்
நட்பை வளர்க்கும் நண்பரை போற்றும்
நட்பை கொல்லும் மனிதரை தூற்றும் ..........
பலகோணங்கள் கொண்ட எனது படைப்பு
படிப்பவர்கள் கொடுத்த ஊக்கத்தின் மதிப்பு
நல்லவர்களின் கொடுத்த ஆசியின் அளவு
நலமாய் வளர்ந்தது புத்தக பதிவு .........................