இடம், பொருள்
சக்கர வண்டியை
கைகளால் தேய்த்தபடி வந்தவனை...
மேல் சட்டை அணியாத
சிறு பெண்ணை....
இரண்டு கைகளிலும்
பாதி இல்லாதவனை...
தள்ளாடியபடியே வந்த
கிழவியை....
மேலும் நீண்ட
எல்லா பிசைக்காரர்களிடமும்
அலுத்துக் கொண்டான்
"இதுங்களுக்கு இதே வேல
செத்து ஒழிய வேண்டியது தான!"
டீக்கடையில் கண்ட
நண்பனிடம் கேட்டான்
"மச்சான்! ஒரு டீடா!
அப்படியே
ஒரு சிகரெட் எடுத்துக்கிறேன்."