நேசித்தல்
ஒற்றையாய், துணை சுருதியற்று
நள்ளிரவில்
கரையும் காகம்!
பேரிருட்டின் சிறு வடிவென
மரத்தில் அசைகிறது
அடர்ந்த கருப்பாய்!
எவ்வித நினைவுக்குள்ளும்
அடங்கவொன்னாது
நீண்டு குறைகிறது
எங்கோ ஒரு நாயின்
சப்தத்தின் ஸ்தாயி
மொட்டவிழும் மலர்கள்
கொட்டி கலக்கின்ற வாசனை
இருளில் பரவுகிறது
அனைத்தும் துறந்து
இருட்டுக்குள் குதிக்கிறேன்
இருட்டலை எழுந்து உயர்ந்து
எழுப்பிய மௌனத்தில்
அமைதியாகிறது
எல்லா சப்தங்களும்
விடிந்து எழுந்து வருகையில்
அங்கங்கே சில துளியாய்
என் மீது இருட்டை பார்க்கலாம்
இருட்டை சிநேகித்தல்
இன்னமும் பிடிக்கும்
என்ன செய்ய
" கருவறை பழக்கம்?"