தன்னில்....தன்னில்....(அகன் )
தன்னில்,
நீந்துவதற்காக மீன்களைத்
தெரிவு செய்யாத கடல்......
தங்குவதற்காக பறவைகளை
நேர்காணல் செய்யாத மரம்...
எவருக்கு எவ்வளவு என
பங்குப் பிரிக்காத மழை......
பனித்துளி கலந்த ஸ்பரிசத்தை
அளந்து அளிக்காத மலர்......
சாம்பலான உயிர்களுக்கென
பட்டா பிரித்துக் கொள்ளாத பூமி.....
. எதையும் எதிர்பார்ப்பற்ற நிலையில்
இப்படிதான் இவைகள்
தன்னில் மனிதர்கள்
வைத்திருப்பது எவற்றை...???