கண்ணதாசனின் நகைச்சுவைகள்..01

திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]" நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள். "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்.
************************************************
அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம்
கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான் " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (15-Jul-13, 7:00 pm)
பார்வை : 300

மேலே