ஊது குழல்கள்.(ரோஷான் ஏ.ஜிப்ரி)
ஊது குழல்களினுடே
யாரோ ஒருவனின்
ஏவலிலிருந்துதான் புறப்படுகிறது
அமைதியை குலைக்கும் மகுடி
இதிலிருந்து அறிய முடிகிறது
பாம்புகளுக்கு உரித்தான
பாடுபொருள் கொண்டு
மான்களை வேட்டையாட
நாணேற்ற படுகிறதென்று
பரீட்சய முகத்தோடு
காவிகளுக்குள் பேயாய்
மறைந்திருப்பவனை
விசுவாசமுள்ள மிருகங்களுக்கு
தெரியும் இவன்தான் என்று
ஆயினும்;
வால் குழைத்து
கிடக்க வேண்டியிருக்கிறது நன்றியுடன்
அவன் வீசும் எச்சில்களுக்காக!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.