இறந்த பிறகு என்ன செய்வாய் ........
"நான்"
இது எப்போது தோன்றியது
எப்போது மறையும்
எவ்வாறு மறையும்
உயரத்தில் இருந்து விழுந்தா
கீழிருந்து மேலே செலுத்தப்பட்டா
ஊதி வெடித்தா
ஓடிக்கி நசுக்கியா
ஊண் வெறுத்தா
உறுப்பு அறுத்தா
விசத்தினாலா
விசமத்தினாலா
இயற்கையா
அகாலமா
மனிதா உன் மரணம் உறுதி செய்யப்பட்ட ஓன்று
அது எவாறு நிகழ வேண்டும் என்று விரும்புகிறாய்
உன் வாழ்வின் கடைசி நிமிடம் எப்படி இருக்கும்
இது வரை உனக்காக உன் சுற்றதிர்க்காக
என்ன செய்துள்ளாய்
பேராசை பட்டு அதை அடைய துரோகம் செய்தாயா
பொய் எத்தனை
வஞ்சம் எவரிடம்
லஞ்சம் எவ்வளவு
இது ஓன்று கூட உன் மரணத்தை ஒரு நொடிகூட
தள்ளி வைக்க போவதில்லை
மரணம் உன்னை சுட்டெரித்து மனிதனாக்கும்
அது வரை காத்திருக்காதே இப்போதே
மனிதனாய் மாறு
உடல் அழிந்தாலும் உலகில் வாழலாம்
நல்ல உள்ளங்களில் மட்டும்