வாழும் தமிழீனம்
வங்க கடலோரம்;நாங்கள் வாழும் தமிழீனம்
எங்கள் வாழ்வாதாரம்; வலை வீசும் அவதாரம்
பெண்கள் கரையோரம் ; அவர் கண்கள் கடலாகும்
தங்கள் சிங்கம் படகேறி ;
மீன் தங்கம் துணையோடு
வருமென்று வழிபார்த்து,
நெஞ்சம் அடியோடு ; கொஞ்சமும் துடிக்காது
சிங்கள ராணுவம் சிறைபிடித்தது எனகேட்டு,
நஞ்சு நாவோடும் நரக குணமோடும்,
பிஞ்சு குழந்தைகளும் , பிடிவாத அலைபோலே
கரைவிஞ்சி கடல்தாண்டி - கரும்பாய்
மென்று துப்ப நினைத்தேவும்!