புது உலகம்

புவியொன்று புதிதாய் வேண்டும்-அதில்
புதுமைகள் பூத்திட வேண்டும்
உயிர்வாழ் இனங்கள் ஜனித்திட வேண்டும் அவை ஊனமின்றி ஜெயித்திட வேண்டும்

பஞ்சம் வேண்டாம் பசி வேண்டாம்
பசுமை பூண்ட பூமி வேண்டும்
பகைமை வேண்டாம் பாசம் வேண்டும்
போர் இல்லா அமைதி பார் வேண்டும்

சாதி வேண்டாம் சமயம் வேண்டாம்
சீர்திருத்தம் சமத்துவம் வேண்டும்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமைகளும் வேண்டும்

இப்படியோர் புது உலகம் பிறந்து விட்டால்
சூழ்ந்திருக்கும் இருளகன்று விட்டால்
ஒன்றென்ன இரண்டென்ன -ஒன்பது
உலகங்கள் கூட வேண்டும்

எழுதியவர் : புஷ்பமேரி (18-Jul-13, 12:28 pm)
Tanglish : puthu ulakam
பார்வை : 113

மேலே