பெண்ணுரிமை
எட்டாக் கனியாக
எந்நாளும் இருக்கிறதே !
கனவுகளை உடைத்துவிட்ட
நிஜங்கள் கண் முன்னே நிற்கிறதே !
வளைந்த முதுகுத் தண்டில்
வலி இன்னும் குறையவில்லை !
சமையல் செய்யும் அடுப்பங்கரை
எல்லையைத் தாண்டிட முடியவில்லை !
ஆண்டுகள் ஆயிரம் கடந்தும்
எங்கள் கண்ணீரின் உப்பு குறையவில்லை !
பெண்மை கேட்கும் " சம உரிமையை "
மானுடம் தருவதைத் தெரியவில்லை !
பூட்டிய விலங்கினைத் தகர்த்தெறிவோம் !
நமக்கான பாதையை நாமே
வழி வகுப்போம் !
புத்தம் புது உலகம் படைக்க
பெண்மையே உந்தன் பழமையைத்
துறந்து வெளியே வா !!!!