என் மகள்... இது தந்தையின் பதிப்பு...
![](https://eluthu.com/images/loading.gif)
ஆகாய நிலவே வா,
அந்தி பூத்த மலரே வா,
அழுகின்ற அழகே வா,
அழாமல் தவழ்ந்தே வா...
மழலை மொழியை நான் அறியேனே,
உன் மனதின் மொழியை நான் அறிந்தேனே...
அப்பா என்று உன் இதழ் சொல்ல,
என் செவிகள் கேட்க நான் பறந்தேனே...
நீ நடை பழகும் நாட்களிலும்,
உன் நிழலென நானும் தொடர்வேனடி,
உன் முதல் அடி எந்தன் நெஞ்சினிலே
என்ற கர்வத்துடன் நான் செல்வேனடி,
உன் முதல் முத்தம் எந்தன் உதட்டிலே
இதை ஊரறிய நான் சொல்வேனடி...
தூக்கம் வருகின்ற வேளையிலே
தோலில் நான் உன்னை சுமப்பேனடி,
தாயாக மாறி நான் உனக்கு
தாலாட்டு பாட்டு படிப்பேனடி,
தூங்கும் உந்தன் அழகினையும்
தூக்கம் மறுத்து நான் ரசிப்பேனடி...
காற்றினிலே ஈரம் கூடுதடி,
என் கண்களில் நீரும் எட்டி பார்க்குதடி...