வாலி என் காதலன்

நீர்
விடுத்தால் வாளி - இந்த
பேரண்டத்தில் அத்தனை
கவிஞனும் காலி !
தமிழுக்கு உம தாடி தூளி-தமிழுக்கு
நீரும் தரமான வேலி!
மேலென்ன உமக்கு சோலி?
மீண்டும் செம்மொழி வயலில்
விதை உம் சாலி !

திரைக்கு பின்னால் தமிழுக்கு
நீர் விலா - உம்மை
தவிர்த்து திரையுலகில் ஏது விழா?
கனவில் உறவாடி - என்
கற்பனையை
கருக்கொள்ள செய்தவனே !
தாத்தா !- உன் தமிழை
தா தா !
போரிட நினைத்து
பாதி பலம் ;
நேரிலே கண்டதில்
மீதி பலம் - என நிராயுத பாணிகளாய்
நின்றவர்கள் உம் முன் ஏராளம் -என்றுமே
நின் கவியே பாராளும் !

முடியும் தருவாயிலுள்ள -என்
முதல் நூலுக்கு உம் -அணிந்துரை
பெற அல்லும் பகலும் ஆவலுற்றிருந்தேன் !
முடியும் முன்பே என் - சுயசரிதையில்
ஒரு பக்கம் கிழிந்ததே !!!!

"உணவில் உப்பாய்;
உதிரத்தில் வெப்பாய்'

இது TMS கு -உமது நன்றி !

"உயிரில் தமிழாய்
உணர்வில் தாயாய் "

எனது நன்றி ஐயா உமக்கு!

அம்மாவிற்கும்,
என் அன்பிற்குரிய (அவளுக்கும் ) ,
பிறகு நான் அதிகமாக நேசித்தவனே!
உனது பாதங்களுக்கு என் முத்தங்கள்
--- இராவணன் தர்ஷன்

எழுதியவர் : இராவணன் தர்ஷன் (18-Jul-13, 7:14 pm)
பார்வை : 97

மேலே