காத்திருந்த பூ...
நீ வருவாய் நீ வருவாயென
என் கையிலிருந்த பூவிற்கு
நானொரு கதை சொன்னேன்
கதை கேட்டும் நேரம்
கெட்டாதாலோ என்னவோ
காத்திருந்து நீ வராததால்
மனம் கெட்டு தன்னுயிரைத்
தானே மாய்த்துக் கொண்டது
நீ காண வேண்டி
காத்திருப்பின் அடையாளமாய்
அதனுடலையும் என் கையில்
தந்து போயது
அன்பே சீக்கிரம் வந்து விடு
என்னுயிராவது உனக்கு
மிஞ்சும்..