தளமும் வாலியும் !!

வார்த்தைகளால்
ஒரு பிடி பிடிப்பவர்

கற்பனையால்
எல்லா மலர்களையும்
மலரச் செய்தவர்

திரை உலகத்தை
தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தவர்

தான் கட்டுப்படுவதை
நினையாதவர்

நம் மன உலகத்தையும்
தன் வசப்படுத்தியவர்

தான் வெளியேறியதால்
நம்மை உதிரச்செய்தவர்

எழுதி எழுதி ஒய்ந்தபின்
நம்மை
மாய்ந்து மாய்ந்து
எழுத வைத்தவர் !

எழுத்துத் தளம்
இன்னும் இன்னும்
தன் கண்ணீரை
சேகரித்துக் கொண்டிருக்கிறது.,

வங்கக் கடலின்
கொள்ளளவும்
ஈரத்தின் தன்மையும்
சிறிதென்று காட்டிட!

பதினைந்தாயிரம்
பாடல் என்கிறார்கள்
ஓராயிரம் கோடி ஒலித்தை !

அதைவிட
முந்திக் கொண்டது
நமது தளம்...
இரங்கற்பாக்களால் !

தள நண்பர்களின்
பாக்கள்
வாலிக்கு தூவிய
பூக்கள் !

அவை
உலகமெங்கும்
அழுது கொண்டிருக்கிறது !

வானம் சிந்தும் மழை
தள நண்பர்களின்
கண்ணீர்...

அது
வருத்தக்கடல்
மிதமிஞ்சிப் பொங்கியதால்
வெளியேறிய மழை !

இந்தக் கண்ணீர்
அஞ்சலியைத் தொகுத்து
வாலியின்
காவிய உலகிற்கு
காணிக்கை செய்வோமே!!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (20-Jul-13, 11:26 am)
பார்வை : 95

மேலே