பத்தினியின் பஞ்சம்

குடித்து விட்டு....
வீடு திரும்பிய கணவன் ...
கால்வயிறு கஞ்சிக்கு கூட
காசு கொடுக்காமல்...
காலியான....
மண்ணெண்ணை பெட்டியை
தேடுகிறான்....
அவளை காயப்படுத்த....
காயப்படுத்த
மண்ணெண்ணை தேவையில்லை
அவன் வார்த்தை....
திரவியமே போதும்....
குடிகாரன் தீ குளிக்க
சொன்னால் கூட....
இன்றைய ஏழை பத்தினிகள்
தீ குளிப்பதில்லை....
காரணம்....
அவளிடத்தில்......
தீ குச்சிகளுக்கு கூட....
பஞ்சம்தான்......
-அமுதநிலா

எழுதியவர் : amuthanilla (22-Jul-13, 12:34 pm)
பார்வை : 117

மேலே