அவள் ஒரு சகாப்தமே!

குழந்தை என பிறந்தாய்!
மகளாய் மண்ணில் வளர்ந்தாய்!!
உழைப்பிலே நீ தேகம் இழைதாய்!
கண்ணென குடும்பம் காத்தாய்!!
காவியத்திலும் இடம் பிடித்தாய்!
அழகிற்கு இலக்கணம் வகுத்தாய்!!
மக்கள் தன்னை ஈன்றடுத்தாய்!
பாசம் காட்டி உருக வைத்தாய்!!
இத்தனை சாதனை செய்ததால் தானோ,
பெண்ணே நீ எங்கள் தாய்!
இருந்தும் உன்னை கருவிலே கலைப்பது ஏன்? பிறந்த உன்னை அழிப்பது ஏன்?
ஆயினும் பெண் பிறந்தாலும், இறந்தாலும் அவள் ஒரு சகாப்தமே!