+இவன் லஞ்சத்தில் பொழைப்பை நடத்தும் வஞ்சகன்!+

ஏழையின்
அன்றைய பொழுதின்
கஞ்சியானது
இவனது
நாய்க்கு
சிறு தின்பண்டமானது!

பலரது
வேர்வைத்துளிகள்
இவனது
மாடிப்படிகள்!

அவர்கள்
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தனர்!
இவன்
அவர்களை
சுரண்டி சுரண்டி
தங்கமாய் மிளிர்ந்தான்!

அவர்களது அடையாளம்
எலும்புக்கூடு!
இவனது அடையாளம்
ஒஸ்தி காரு!

இவன்
வயிற்றுக்குள்
நான்கு ஏழைகள்
குடியிருக்கலாம்!

இவன்
மென்று போடும்
சோற்றைத்தின்றால்
நாய்க்குகூட
செரிக்காது!

இவனை
திருத்தவந்தவர்கள்
திருந்திவிட்டனர்
இவன்
பக்கமே வரக்கூடாதென்று
திரும்பிவிட்டனர்!

பலர் குறுதி குடித்து
பொழைப்பை நடத்தும்
இவனுக்கு இறுதி வந்தால்தான்
பலரின் நல்வாழ்வு உறுதியாகும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Jul-13, 3:29 pm)
பார்வை : 65

மேலே