நீ அறியாமல்..!
என்னிடமும் இருக்கிறது
ஒரு கவிதை..!
அதனை..
எழுதத் தூண்டியவன் நீ
உன்னோடான அனுபவங்களை
அப்படியே எழுதிவிட
ஆயிரம்முறை வார்த்தைகளை
தேடினேன்..,
வார்த்தை வார்த்தையாகப்
பொறுக்கியெடுத்து..
வரி வரியாகக் கூட்டிச் சேர்த்து
வடித்தபோது..
எனக்குத் திருப்தியாகத்தான் இருந்தது.!
ஆனால்..
அது உனக்குப் பிடிக்கவில்லை..!
கணவனெனும் கட்டுமானத்தை
விமர்சிக்கிறது என்கிறாய்..,
ஆணாதிக்கத்தை தகர்க்கிறது
என்கிறாய்..!
நீ அறியாதவகையில்
கவிதைகள் எழுதிவிட
பெண்ணுக்கென தனிமொழி
உண்டா சொல்..?

