அந்த ஒரு நொடியில்...

ஒரே வண்ணத்தில் தோன்றும் விடியல்
வானவில்லாய் மாறி மாயம் புரியும்...
மலர்கள் அத்தனையும் ஒன்று கூடி
வாசம் கலந்து வாசலில் கோலமிடும்...!

ஆசையும் மமதையும் தலைக்கேற
உற்சாகம் வீதியுலா செல்ல
தடுக்கி விடும் சிறு பாறையாய்
உச்சந்தலையில் நறுக்கென ஒரு கொட்டு...!

ஆனந்தம் கண்ணில் காட்டி
உச்சம் வரை வேடிக்கை பார்த்து
மகிழ்ச்சி கொடுத்து மறுநொடி
இதயம் உடைக்கும் மாயமென்ன?

நொடிப்பொழுதில் மாறிவிடும்
வாழ்க்கைப் பயணம்...
கனவுகள் விதைத்து கண்கள் விரித்த
வாழ்க்கைக்கோர் வேகத்தடை...!

நுரை ததும்பும் உற்சாக அலையை
அணைப்போட்டு தடுக்கும் முயற்சியாய்...
நெஞ்சத்துளிகளில் நெருஞ்சி முள்
தைத்து ஒரு ஒத்திகை நாடகம்...!

காட்சிகள் கலைந்து சாட்சிகள் மறைந்து
மவுனமொழி பேசும் தருணம்
கானலைப் போலவே வானவில் தோன்றி
அந்த ஒரு நொடியில் வாழ்க்கைச் சுவையை
மீண்டும் மாற்றி அமைக்கும்...!

எழுதியவர் : ஜீவா (23-Jul-13, 7:53 am)
பார்வை : 109

மேலே