சறுக்கல்கள் எல்லாம் சவால்களே!

அவமானம் என்பது
மன அதிர்ச்சி!
வெடித்து சிதறட்டும்
உன் எழுச்சி

ஏளனம் என்பது
ஒரு உந்துவிசை
எழுந்து நின்றால்
எல்லாம்
உந்தன்திசை!

சறுக்கல் என்பது
ஒரு கவன ஈர்ப்பு!
எச்சரிக்கை வேண்டும்
என்பதற்கோர்
எச்சரிக்கை!

சுற்றிப் பார்த்து
சுற்றிலும் பார்த்து
செயல்களைச் சுழற்று
வெற்றிடமெல்லாம்
வெற்றிகள் குவியும்!

பிரச்சனை என்பது
ஒரு பூச்சாண்டி
அவன் பின்னால்
வைத்திருக்கிறான் பூச்செண்டு!

தோல்வி என்பது
பாடநூல்
வாசித்து வாசித்து
சவால்களை நேசிக்க
கற்றுக்கொள்!
வெற்றியின் வேர்களைக்
கவனமாய் பற்றிக்கொள்!

எழுதியவர் : (23-Jul-13, 9:18 am)
பார்வை : 76

மேலே