நேரத்தை நிறுத்திட யாரால் முடியும்?

காலத்தின் மனதில் வாழ்வைப் பதித்திட
காலந்தாழ்த்தும் சோம்பலை விரட்டி விட்டு
காலத்தை வெல்லும் செயல்களை விதை!
கணந்தோறும் காற்றைப் போல உழை!

கரையும் நேரம் ஆயுளை எரிக்கும்
கரையில் நின்றால் வாய்ப்பகள் நழுவும்
எதிர்பாராத திருப்பங்களை எதிர்பார்த்தே இரு!
எதிரும் புதிரும் ஒன்றாய்ச் சேருவதும் நிகழும்.

அணுவைப் பிளக்க நம்மால் முடியும்
அலையை நிறுத்திட யாரால் முடியும்?
நேர்மையில் நின்றிட முயன்றால் முடியும்!
நேரத்தை நிறுத்திட யாரால் முடியும்?

எழுதியவர் : (23-Jul-13, 11:59 am)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 81

மேலே