என் தங்கை
என் தங்கை
பாசத்தில் மறு பிறப்பு
பண்பில் இவள் சிறப்பு
தன்னையே நேசிக்க கற்று தந்து
எனக்குள் என்னை சிந்திக்க வைத்து
எனக்குள் நிறைய மாற்றங்கள் தந்து
தவறென்று அறிந்தும்
தண்டனையாய்
தவறை மாற்ற வழி சொன்னவள்
கோபம் குறைக்க
கோபத்திற்குரியவர்களின் நிலையை
சிந்திக்க சொல்லி தந்தவள்
தலைகனத்திற்க்கும் திமிருக்கும்
வேற்றுமை காட்டியவள்
இவள்
என் வாழ்வின் "முத்து"க்கள்
என் வானில் நட்சத்திர "மீன்(ஆ)"னவள்...............