பிரதோஷங்களின் மகிமை!
பிரதோஷங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம்!
பிரதோஷ காலங்களில் உபவாசம் இருந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். எனவே இக் காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.
" சிவாய நம " என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும்!
சிவ புராண பாடல்களை பாடியும் எம் பெருமானை வழிபடலாம்.
நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும்!
தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம்!
தொடர்ந்து 12 வாரங்கள் பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள்..
சிவனை வழிபட்டு வர..
13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம்!
மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனைக்
கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும்!
அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்!
சிவாய நம!
சிவாய நம!